சாரதி ஒருவரை தாக்கி 55 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் 71 ஆயிரம் ரூபா பெறுமதியான சொத்தையும் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நிவித்திகல பிரதேசத்தில் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இரத்தினபுரி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரத்தினபுரி மற்றும் கடுவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்தனர்.
திருடப்பட்ட காரை பிரித்து விற்பனைக்கு தயார்படுத்தியிருந்த நிலையில் மற்றுமொரு சந்தேக நபருடன் மல்சிறிபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26 மற்றும் 37 வயதுடைய கடுவெல, இரத்தினபுரி மற்றும் மல்சிறிபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இவர்கள் இன்று (18) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.