சாய் சுதர்சன் ஆட்டத்தில் ஒரு தெளிந்த நீரோடைக்கு உள்ள தெளிவு இருக்கிறது, அது தான் அவரை முன்னிலை படுத்தி காட்டுகிறது
அது என்னவென்றால் பந்தை தூக்கி அடிப்பதே மிக குறைவு தான்
அவர் அதிகமாக தரையோட தரையாக தான் அடிக்கிறார் உதாரணமாக டிராவிட்டை போல என்று சொல்லலாம். அதே போல் அவர் அதிகமாக ஓடியே ரன்கள் எடுக்கிறார் உதாரணமாக விராட்டை போல என்று சொல்லலாம் அப்படியே அடித்தாலும் கூட பவுண்டரிகள் தான் அடிக்க ஆர்வம் காட்டுகிறார் சிக்ஸ் அடிப்பதிற்க்கான முயற்சி அதிகமாக எடுப்பது இல்லை. இப்படி ஆடும் இவர் ஆட்டத்திறன் இவருக்கு பெரிய ஸ்கோர் அடிக்க உந்துதலாக இருக்கும்
நீண்ட நேரம் களத்தில் நிற்க்கவும் பெரிய உதவியாக இருக்கும்
இந்த ஆட்டத்திறன் எந்த எந்த பார்மட்டுக்கு இவருக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என்றால்??
அது கண்டிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மிக சரியாக பொருந்தும் வகையில் இருக்கிறது
அறிமுகம் ஆன முதல் இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நவ்ஜோட் சித்துக்கு பிறகு இவர் தான் இருக்கிறார், இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை இவர் ஆடிக்கொண்டிருக்கும் இடத்துக்கு மிக பெரிய போட்டி இருக்கிறது
அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் 3 பார்மட் பிளேயராக இருக்கிறார் அதனால் இவருக்கு ஹெவி காம்படிட்டராக ஜெய்ஸ்வால்
இருக்கிறார் இன்டர்நேசனல் போட்டிகளில் ஒரு தமிழன் சாதிக்க ஆம்பித்து விட்டான் என்றே சொல்லலாம்.
by- சசிக்குமரன்