சர்வேதச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை பொதுமக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் (மகாபலிபுரம்) ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும். பல்லவ மன்னர்கள் காலத்தில் இங்கு முக்கிய துறைமுகமாக மாமல்லபுரம் கடற்கைரை செயல்பட்டு வந்துள்ளது. இச்செழிப்பன துறைமுக நகரம் அழகிய சிற்பங்களுடன் பல்லவ மன்னர்களால் வாழ்நாள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐந்துரதம்,கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் அர்ஜுனன் தபசு ஆகியகுடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.
பழமையான கோயிலை அதன் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது, மேலும் இது தென்னிந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது திராவிட பாணியில் கட்டப்பட்டது, இது பல்லவர் காலத்தில் பிரபலமாக இருந்த பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கிறது
ஐந்து ரதங்களைக்’ குறிக்க ‘பஞ்ச ரதங்கள்’ என்ற பெயரும் பயன்படுத்தப்படலாம். பகோடா வடிவிலான இந்த பாறைக் கோயில்கள் புத்த மடாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற வகையான புத்த கட்டிடங்களை ஒத்திருக்கின்றன. திரௌபதி ரதம் என்பது முதல் ரதத்தின் பெயர், இது பிரதான கதவுக்குள் காணப்படுகிறது.
கடற்கரைக் கோயில், குகைக் கோயில்கள், கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை, அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதங்கள், மஹிசாசுரமர்த்தினி குகை, கிருஷ்ண மண்டபம், சிற்பக் கல்லூரி, வராக குகை, திறந்தவெளி அருங்காட்சியகம், மாமல்லபுரம் லைட் ஹவுஸ், கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், சீஷெல் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை சுற்றி பார்க்க இன்று ஒரு நாள் அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என்று சுற்றுலா துறை தெரிவித்துள்ளது