Homeவிளையாட்டுCricketசர்ச்சைக்குள்ளான எல்.பி.டபுள்யூ அவுட் - அதிர்ச்சியில் உறைந்த விராட் கோலி!

சர்ச்சைக்குள்ளான எல்.பி.டபுள்யூ அவுட் – அதிர்ச்சியில் உறைந்த விராட் கோலி!

Published on

டெல்லி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் நிறைவடதற்குள் 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் படேல் 34 ரன்னிலும், அஸ்வின் 20 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அவரது அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஹ்ரிமென் வீசிய பந்தில் விராட் கோலி எல்.பி.டபுள்யூ அவுட் ஆனார். ஆனால், பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே இருந்த நிலையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

நடுவர் அவுட் கொடுத்த நிலையில் கோலி ரிவ்யூ கேட்டார். மூன்றாம் நடுவர் ரிவ்யூ செய்தபோதும் பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது தெரியவந்தது. இருந்தபோதும் மூன்றாம் நடுவரும் களத்தில் இருந்த நடுவரின் முடிவை போன்றே அவுட் கொடுத்தார். இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய விராட் கோலி பின்னர் தனது அவுட் குறித்து பயிற்சியாளர்களுடன் இருந்தபோது தொலைக்காட்சியில் பார்த்தார். அப்போது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விராட் கோலிக்கு அவுட் கொடுத்த விவகாரம், அதற்கு விராட் கோலியின் ரியாக்ஷன் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this