Homeஇலங்கைசமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி பண மோசடி

சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி பண மோசடி

Published on

சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும்  மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை  பெறும் முதியவர்களையாம் இலக்கு  வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை  அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு  வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் 16 ஆம் திகதி  ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரிடம் 19ஆயிரம் ரூபா பெற்றுச்சென்றுள்ளார்.

மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் NP – HX 3125 இலக்க மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளில் சென்று நல்லூர் பகுதியில் ஏற்கனவே ஒருவர் மோசடி செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டது.

விசாரணைகளின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தான் விற்பனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்ததாக ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி தெரிவித்தார்.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this