காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘சமுத்திர தேவி’ புகையிரதம் இன்று (23) காலை களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ரயில் தடம் புரண்டதால் கடலோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வழித்தடத்தில் உடனடியாக ரயில் சேவைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.