கினிகத்தேன, கந்தசுரிடுகமவில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள், தாய் மற்றும் அவரது மகள் ஆகியோரின் சடலங்களை பொலிஸார் நேற்று (9) கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 50 வயதுடைய கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலங்கள் படுக்கையறைக்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதவான் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.