Homeஇந்தியாசந்திரயான் 3-ல் முக்கிய பங்குவகித்த இந்தியாவின் ராக்கெட் பெண்

சந்திரயான் 3-ல் முக்கிய பங்குவகித்த இந்தியாவின் ராக்கெட் பெண்

Published on

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா. இவர் இந்தியாவின் ராக்கெட் பெண் என அழைக்கப்படுகிறார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து  சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விண்கலத்தை சுமந்து சென்ற ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்துள்ளனர்.

Imageஉலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா. இவர் ”இந்தியாவின் ராக்கெட் பெண்” என அழைக்கப்படுகிறார். தற்போது, இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பயணமான சந்திரயான்-3 க்கான பணி இயக்குநராக ரிது பணியாற்றியுள்ளார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானியாக உள்ளார். மங்கள்யான் (செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம்) திட்டத்தில் திட்ட மேலாளர் மற்றும் துணை செயல்பாட்டு இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு, லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியல் பட்டமும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) முதுகலை தொழில்நுட்பம் படிப்பையும் முடித்தார். சிறு வயதிலிருந்தே விண்வெளியை ஆராய்வதில் ஆர்வத்தை வளர்த்து கொண்ட ரிது, இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதை பள்ளி நாட்களில் பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

ரிது கரிதால் கடந்த 1997-ம் ஆண்டு, நவம்பர் மாதம் இஸ்ரோவில் சேர்ந்தார். இஸ்ரோவின் பல மதிப்புமிக்க திட்டங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். பல திட்டங்களில் செயல்பாட்டு இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சர்வதேச மற்றும் தேசிய ஆய்விதழ்களில் 20 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் இளம் விஞ்ஞானி விருது, இஸ்ரோ குழு விருது, ஏஎஸ்ஐ குழு விருது, சொசைட்டி ஆஃப் இந்தியா ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி மற்றும் இண்டஸ்ட்ரீஸின் ஏரோஸ்பேஸ் வுமன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...