Homeஇந்தியாசந்திரயான்-3 லேண்டரின் இருப்பிடம்-நாசா வெளியிட்ட புகைப்படம்

சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிடம்-நாசா வெளியிட்ட புகைப்படம்

Published on

சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது. சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய திட்டங்களை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியான தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் 5 முறை பூமியின் நீள் வட்டப் பாதையில் சுற்றி, அதன் பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் நுழைந்து பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது.

கடந்த ஆகஸ்டு 23ம் தேதி மாலை அது வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியாகி ஆய்வை தொடங்கி உள்ளது. குண்டு குழியுமான நிலவின் மேற்பரப்பு, விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் என அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பிரக்யான் ரோவர் பதிவு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் நிலவில் ஹீலியம், சல்பர் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் இருப்பதையும் பிரக்யான் ரோவர் கண்டிபிடித்தது.

சந்திரயான் 3 விண்கலம் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதை நிறைவு செய்து 100 சதவீதம் இதில் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ. தொலைவில் சந்திரயான்-3 நிலை கொண்டுள்ள நிலையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயான் லேண்டர் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய ஆர்பிட்டர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this