இலங்கையின் மிகப்பெரிய அரச சில்லறை வர்த்தக நிறுவனமான லங்கா சதொச நான்கு அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (ஜனவரி 12) முதல் இந்த தள்ளுபடி விலை அமுலுக்கு வரும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 220 ரூபாவாகவும், சுடு கெகுலு கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுடு நாடு கிலோகிராம் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 198 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.