புத்தளம் – கிவுல பகுதியில் தோட்டமொன்றில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை நேற்று (10.02.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 10 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளும் புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.