இலங்கை கடற்படை மற்றும் காலியில் உள்ள கலால் திணைக்கள அலுவலகம் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் அஹங்கமவில் சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய இரு சந்தேக நபர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜனவரி 18 ஆம் திகதி அஹங்கம பஸ் நிலையத்தில் கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயார்படுத்தப்பட்டிருந்த 120 வெளிநாட்டு சிகரெட் பொதிகள், 05 கிலோ 150 கிராம் புகையிலை தூள் மற்றும் 2400 சிகரெட் வடிகட்டிகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய ஹபராதுவ மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் புகையிலை பொருட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக காலியில் உள்ள கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.