சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் 42 வயதுடையவர் எனவும் இவரிடமிருந்து 600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர் .
இவர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.