Homeஇலங்கைசட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு

சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு

Published on

நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் சொக்லேட்களை இறக்குமதி செய்து அதனை விநியோகித்திருந்த வீடொன்று சோதனையிட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகளுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரி கோசல ரங்கநாத் தலைமையில் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதுடன் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this