ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உறுப்பினர்கள் இருவரை குற்றவியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SSP நிஹால் தல்துவா தெரிவித்தார்.