பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டென்டுல்கர் – விநோத் காம்ப்ளி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இந்தியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் நடந்து வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழ் வர்ணனையில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஆகியோருடன் கௌதம் வாசுதேவ் மேனனும் கலந்துக்கொண்டார்.