க.பொ.த சாதராண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் இரண்டையும் அடுத்த ஆண்டு முதல் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில், பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் போன்ற ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்று, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.