மட்டக்களப்பு, கெவிலியமடுவ ஸ்ரீ அபிநவராம விகாரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முன்னேற்றமடையவில்லை என அம்பிட்டியே சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றவாளியை தாமதிக்காமல் கைது செய்யுமாறு கூறிய சுமணரதன தேரர், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார். கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், இரவு வேளையில் ஆலய வளாகத்துக்குள் பதுங்கியிருந்த துப்பாக்கிதாரி ஒருவர், சுமனரதன தேரர் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
சுமணரதன தேரர் கெவிலியமடுவ ஸ்ரீ அபிநவராம விகாரை மற்றும் மங்களராம ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதியாக கடமையாற்றுகின்றார்.