பொதுவாக நமது ஊர்களில் கோயில் மற்றும் வீடுகளுக்கு ஏற்றப்படுவது தீபஎண்ணை என்று சொல்லக்கூடிய மகா மட்டமான கலப்பு எண்ணையாகும் இதில் எந்த விதமான வாசனையும் வருவதில்லை சில கெமிக்கல்கள் கலந்து தயாரிக்கப்படுவதால் நீண்ட நேரம் எரியும் தன்மை இருப்பதால் இந்த எண்ணையின் பின்புலம் அறியாமல் மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இந்த எண்ணை பயன்பாடு அதிக அளவில் இல்லை, தீப எண்ணையில் சமையல் செய்து சாப்பிட இயலுமா என்ன
நாம் உட்ககொள்ளும் எந்த எண்ணையும் கடவுளுக்கு சமர்பிக்கலாம்
சுத்தமான கடலை எண்ணை
நல்லெண்ணை
விளக்கெண்ணை
தேங்காய் எண்ணை
நெய்
போன்ற எண்ணைகளை பயன்படுத்தலாம்
நெய்தீபம் என கோயில் வாசலில் விற்க்கப்படும் ரெடிமேட் நெய் விளக்குகள் மெழுகில் நெய் எசன்ஸ் கலந்து செய்யப்பட்ட விளக்குகளாகும், இது போன்ற விளக்கை கடவுளுக்கு சமர்பித்தால் கடவுளின் அருளும் ஆசியும் எப்படி நமக்கு கிடைக்கும்
கடவுளை ஏமாற்றுவது போலாகும் வீட்டில் இருக்கும் விளக்குகளுக்கும் சுத்தமான எண்ணைகளை ஊற்றி தீபம் ஏற்றி கடவுளை வணங்கவும் இறைவன் நல்லாசி உங்களுக்கும் கிடைக்கும்.
by Palani