செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகோவாவில் புத்தாண்டு கொண்டாட்டசென்று ஊர் திரும்பும் வழியில் விபத்து தமிழத்தை சேர்ந்த 4...

கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டசென்று ஊர் திரும்பும் வழியில் விபத்து தமிழத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.

Published on

spot_img
spot_img

புத்தாண்டு கொண்டாடுவதற்காக கோவாவிற்கு காரில் சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். வரும் வழியில் கர்நாடக மாநிலத்தில் அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் இருக்கும் அங்கோலா தாலுகாவிற்கு உள்பட்ட பலேகுலி என்ற நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை தாண்டி பேருந்து மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரின் ஒருபக்கம் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தில் சிக்கிய காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பிற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த விபத்து குறித்தும் விபத்தில் சிக்கியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. கோவாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு சொந்த ஊர் திரும்பும் வழியில் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அருண் பாண்டியன், ஆனந்த் சேகர், நந்தகுமார், ஜேம்ஸ் ஆல்பர்ட் ஆகியோர் உயிரிழந்தனர்.

Latest articles

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு….

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது.  புத்தளம் மாவட்டத்தின் முந்தலம் 61 ஆவது சந்தியில்...

காணாமல் போன சிறுவன் பிக்குவாக மீட்பு….

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம்,...

More like this