Homeஇலங்கைகோப்பாய் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.

கோப்பாய் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.

Published on

காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி தெற்கு – நீர்வேலியைச் சேர்ந்த 23 வயதுடைய இரத்தி னேஸ்வரன் பாவிதான் என்பவரே நேற்றுய தினம் (01.02.2023) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்தவர் மீட்கப்பட்டு கோப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this