யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நபரொருவர் 150 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் புலனாய்வு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிசார் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.