Homeஇலங்கைகொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மற்றுமொரு சிறுவன் மரணம்

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மற்றுமொரு சிறுவன் மரணம்

Published on

வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தர்கா நகரினை சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக தர்கா நகர வைத்தியசாலைக்கும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பின்னர் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் களுத்துறை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நோய் கண்டறியப்படவில்லை எனவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

Latest articles

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று நேற்று (03.10.2023)காலை கரையொதுங்கியுள்ளதாக...

More like this