Homeஇலங்கைகொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Published on

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான தொடருந்து சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this