75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு முழுவதும் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டதிற்கமைய கொழும்பின் சில இடங்களில், வீதித் தடைகளை பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.