Homeஇலங்கைகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் வெட்டு.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் வெட்டு.

Published on

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (மார்ச் 04) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (மார்ச் 05) பிற்பகல் 02.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11, கடுவெல நகரம், கொலன்னாவ நகர சபைப் பகுதி மற்றும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி இன்று (மார்ச் 04) முதல் தற்காலிகமாக மூடப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) இந்த வீதியில் நீர் விநியோக குழாய்களை அமைக்க திட்டமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு நாளை காலை 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 05) நண்பகல் 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this