கொழும்பு பெய்ரா ஏரியை இலவசமாக சுத்தப்படுத்தி அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தனவிற்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ளதுடன், திட்டத்திற்கான மொத்த செலவு 3 மில்லியன் டொலர்களாகும். நிறுவனத்திடம் இருந்து நாட்டுக்கு மானியமாக பெறப்பட உள்ளது.
கங்காராம விஹாராதிகாரி, வண. பேரா ஏரி அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுவதால் அதனை சுத்தப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு திட்டம் தொடங்கும்.