கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் எசல திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பல விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை – கண்டி, கண்டி – கொழும்பு கோட்டை, கண்டி – மாத்தளை, கண்டி – நாவலப்பிட்டி மற்றும் கண்டி – பதுளை ஆகிய இடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, இம்மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தினமும் காலை 9.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு ஒரு ரயில் புறப்படும்.மேலும், 26, 27 மற்றும் 30ஆம் திகதிகளில் காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.