இன்று மாலை 6.00 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும். கொழும்பில் அம்பத்தலே நீர் விநியோக பாதையின் திருத்தப்பணிகள் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை NWSDB ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதுடன், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.