Homeஇலங்கைகொழும்பில் ஹோட்டலில் யுவதி பாலியல் வன்புணர்வு -கோடீஸ்வர வர்த்தகர் கைது!

கொழும்பில் ஹோட்டலில் யுவதி பாலியல் வன்புணர்வு -கோடீஸ்வர வர்த்தகர் கைது!

Published on

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக அனுப்பும் நிறுவனத்தை கொழும்பில் நடத்தி வந்த கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் குறித்த யுவதிக்கு அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பின் பேரில் இளம் யுவதி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற நிலையில், சந்தேகநபரால் அறையொன்று முன்பதிவு செய்யப்பட்டு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இளம் பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this