Homeஇலங்கைகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள்!

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள்!

Published on

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்குள் புகுந்த கபர சுரேஷ் என்ற சந்தேக நபர், தங்கப் பொருட்களையும் பணத்தையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பண்டார மற்றும் மதுரங்க ஆகியோருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 42, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

More like this