கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) பிற்பகல் 02.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 05) மதியம் 02:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
இதன்படி, நாளை கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய இடங்களிலும், கடுவெல நகரம், கொலன்னாவ நகர சபைப் பகுதியிலும், வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.