கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (4) நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் நியாயமற்ற சட்டங்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க, நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தாம் பக்கபலமாக நிற்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக நிறுவனங்களுக்கு இடையிலான நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணி ஒன்றையும் நடத்தவுள்ளதாக சமரசிங்க மேலும் தெரிவித்தார்.