கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இன்று (29) காலை 6.00 மணிக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும் ஆயுதப்படையினரும் அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்வார்கள் எனவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஒரு ட்வீட்டில், சில எரிபொருள் நிலையங்கள் ஏப்ரல் விலை திருத்தத்தை எதிர்பார்த்து எரிபொருளுக்கான ஆர்டர்களை வழங்காததை அவதானிக்க முடிந்தது.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்கள் அதற்கேற்ப தங்களது ஆர்டர்களை வழங்கி, தேவையான குறைந்தபட்ச இருப்புகளை பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.