கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய சிட்டி வியூவ் பகுதியில், நேற்று இரவு பற்றிய காட்டுத்தீயானது தற்போது வரை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
தீயின் காரணமாக நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து நாசமாகி உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருக்கக்கூடிய வனவிலங்குகளும் அங்கிருந்து வெளியேறி வருகின்றன.