மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் (23.02.2023) மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையினர் செயலிழக்க வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டர் குண்டொன்று விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியை பெற்று அதனை குறித்த இடத்திலேயே வெடிக்க வைத்து செயலிழக்க செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.