நீர்கொழும்பில் தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் தனது நண்பர் ஒருவரின் 350,000 ரூபா பெறுமதியிலான கையடக்க தொலைபேசி ஒன்றினை தரையில் போட்டு உடைத்துள்ளார் நண்பரிடம் தொலைபேசியினை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்த வேளை அவரிடம் இருந்து பறிக்க முயற்சித்த போது தொலைபேசி தரையில் விழுந்து உடைந்துள்ளது.
ஆகவே தொலைபேசிக்கான 350,000 ரூபா தொகையினை செலுத்துமாறு பொலிசார் குறித்த மாணவனுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த நிலையில் பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் அவர் கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.