பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை (மார்ச் 14) பிலியந்தலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இதன்படி, பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 27 வயதுடைய பெண்ணின் சடலம் கைகள் துணியால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்ததாகவும், அதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (மார்ச் 15) மேற்கொள்ளப்படவுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.