பியகம, கொட்டுன்ன பகுதியில் கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென கருதப்படும் வர்த்தகரின் மகிழுந்து நுவரெலியா – சந்ததென்ன விகாரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.அத்தோடு மீட்கப்பட்ட பெண்ணின் தலைப் பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி 51 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போனதாக முல்லேரிய காவல்நிலையத்தில் அவரது மகள் முறைப்பாடு செய்திருந்தார்.அதன்படி, விசாரணைகளை முன்னெடுத்திருந்த காவல்துறையினர், பியகம – கொட்டுன்ன பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் காணாமல் போயிருந்த குறித்த பெண் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி கடுவலை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நபர் ஒருவருடன் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித் நபர் ஒரு வர்த்தகர் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் சியம்பலாப்பே பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமான வீட்டில் சோதனை மேற்கொண்டதுடன், அதன்போது கொலை நடந்தமைக்கான பல ஆதாரங்களை கைப்பற்றியிருந்தனர்.
அதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த மகிழுந்து கைப்பற்றப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், குறித்த வர்த்தகர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், அவரை கைது செய்வதற்காக 3 விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.