கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கோட்டயம், பாலக்காடு மாவட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோட்டயம், பாலக்காடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோட்டயத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.