Homeஇந்தியாகேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

Published on

கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.மலப்புரத்தின் தானூர் பகுதியில் நேற்று (ஞாயிறு) இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடலோர காவற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், இதுவரை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தேடுதல் பணி தொடர்கிறது என்றார்.

இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் எனத் தெரிகிறது.

கேரள படகு விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this