குவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குவைத் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும்.
இவ்விபத்தினால் எவரும் காயமடையவில்லை எனவும், நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேறியதாக கண்டறியப்படவில்லை எனவும் குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்தள்ளது.