Homeஇலங்கைகுவைத்திலிருந்து மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published on

விசா இன்றி குவைத்தில் நீண்டகாலமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் இவ்வாறு வந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி குவைத்திலிருந்து 33 இலங்கையர்கள் நாடடுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவர்.

அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் நாட்டுக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்காக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Latest articles

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

More like this