இலங்கை முழுவதிலும் உள்ள 336 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கான வருடாந்த பரிசுப் பொதிகள் விநியோகம் இன்று (ஏப்ரல் 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு அமைவாக இந்த விநியோகம் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகம் மற்றும் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன், ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தியுடன் 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.