செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்குழந்தைகளை பாதிக்கும் இரத்த சோகை...!! (Anemia)

குழந்தைகளை பாதிக்கும் இரத்த சோகை…!! (Anemia)

Published on

spot_img
spot_img

இரத்த சோகை என்பது இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை ஆகும். இது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதை இரத்தம் கட்டுப்படுத்துகிறது.

இரத்த சோகையானது காரணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றது. பொதுவாக இரத்த சோகையில் அநேக வகைகள் இருக்கின்றன.

ஊட்டச் சத்து இரத்த சோகைகள்:

இரத்த சோகை வகைகளுள் மிகவும் பொதுவானது, இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையாகும். இது உணவில் இரும்புச் சத்து குறைவதால் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு இரும்புச் சத்து தேவை. தாய்ப்பால், இரும்புச் சத்தால் பலப்படுத்தப்படாத பசுப்பால் அல்லது முழுப் பசுப்பால் மாத்திரம் குடிக்கும் குழந்தைகளுக்கு 6 மாதங்களின் பின்னர், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

உங்கள் குழந்தை இன்னமும் திட உணவு உண்ணத் தொடங்காவிட்டால் உங்கள் குழந்தைகளின் உணவுகளை இரும்புச் சத்தால் செறிவூட்டப்பட்டதாக அமைத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

முழுமையாக முதிர்ச்சியடைந்த குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியமுள்ள தாய்மார்கள், இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் பரிந்துரை செய்யப்படும் வரையில், 6 மாதங்களுக்குத் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொண்டிருப்பார்கள். தாய்ப்பாலிலுள்ள இரும்புச் சத்து நன்கு உறிஞ்சப்படும். 6 மாதங்களில் திட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இது தாய்ப்பாலூட்டுதல் மாத்திரமல்ல, ஆனால் சிபாரிசு செய்யப்படும் சமயத்தில் இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், இரத்த சோகையை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

உணவில் ஃபோலிக் அசிட், விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.

நோயினால் ஏற்படும் இரத்த சோகைகள்

அரிவாள்செல் இரத்த சோகை:

அரிவாள்செல் இரத்த சோகை என்பது சிவப்பு அணுக்களை உருக்குலையச் செய்யும் பரம்பரை வியாதியாகும். இந்த உயிரணுக்கள், சாதாரண இரத்தச் சிவப்பு அணுக்களைப்போல உடல் முழுவதும் நன்கு நீந்திச் செல்ல முடியாது. இதனால் உடலுக்கு குறைந்தளவு ஒகிசிஜனே கிடைக்கின்றது.

சிறுநீரகம் செயற்படாமல் போதல், புற்றுநோய், மற்றும் க்ரோன்ஸ் நோய் என்பனவற்றாலும் தீராத இரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை நோய் மற்றும் லூபஸ் நோய் போன்ற தன்னுடல் தாக்கும் நோயினாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

அப்ளாஸ்டிக் இரத்த சோகை:

அப்ளாஸ்டிக் இரத்த சோகை என்பது ஒரு அரிதான மற்றும் கடுமையான நோய். இது உடல் போதிய அளவு புதிய இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். ஒரு பிள்ளை இந்த இரத்த சோகை நோயுடன் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் ஏற்படலாம் அல்லது ஒரு மருந்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் இது இரத்தப் புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகும்.

ஹீமொலிட்டிக் இரத்த சோகை பெரும்பாலும் ஒரு மரபுவழி நோய். இது அதிகளவில் இரத்தச் சிவப்பு அணுக்களை அசாதாரணமுறையில் அழிக்கும்.

மேலும் வேறு சில காரணங்களையும் குறிப்பிடலாம்:

கடுமையான அல்லது தீராத இரத்தக் கசிவினால் இரத்த சோகை ஏற்படும்.

தீராத இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை.

இது பசுப்பாலிலுள்ள புரதச் சத்தின் ஒவ்வாமையினால் பெரும்பாலும் சம்பவிக்கும்.

தைரோயிட் இயக்குநீர் அல்லது டெஸ்டோஸ்டிரோன் இயக்குநீரின் தாழ்ந்த அளவுகள்.

குறிப்பிட்ட சில மருந்துகளின் பக்கவிளைவுகள், போன்ற காரணங்களையும் குறிப்பிடலாம்.

இரத்த சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:

இரத்த சோகைக்கான அறிகுறிகள் அதன் கடுமை, ஹீமோகுளோபின் எவ்வளவு விரைவாகக் குறைகிறது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பனவற்றை பொறுத்திருக்கிறது. ஒரு பிள்ளையின் உடல் எவ்வளவு நன்றாக ஹீமோகுளோபினின் தாழ்ந்த நிலையைச் சமாளிக்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது.

இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக இருப்பதால், தோல் வெளிறுதல்.

உடலில் ஒக்சிஜனின் அளவு குறைக்கப்பட்டதால், உடலில் சக்தி குறைவுபடுதல்.

உடலில் ஒக்சிஜனின் அளவு குறைந்ததால், உடற்பயிற்சி செய்தபின் அல்லது விளையாடிய பின் விரைவான சுவாசம்.

இரத்த சோகையின் நீண்ட காலப் பாதிப்புகள்:

பிள்ளைகளிலுள்ள சிகிச்சை செய்யப்படாத இரத்த சோகை அவர்களின் வளர்ச்சியில் ஒரு கடுமையான பாதிப்பைக் கொண்டுவரலாம். இரத்த சோகை மூளை விருத்தியடைவது மற்றும் செயற்படுவதைப் பாதிக்கலாம். பெரும்பாலும் இது, கூர்ந்து கவனிப்பதில் பிரச்சினைகள், வாசிக்கும் திறனில் தாமதம், மற்றும் மோசமான பள்ளிக்கூடச் செயற்திறன்கள் என்பனவற்றை விளைவிக்கும்.

இரத்த சோகைக்கான சிகிச்சைகள்:

சிகிச்சை, உங்கள் பிள்ளையின் இரத்த சோகை எ​வ்வளவு கடுமையானது மற்றும் அதற்குக் காரணம் என்ன என்பனவற்றைச் சார்ந்திருக்கிறது. பொதுவான சிகிச்சைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

பாலைக் குறைத்து இரும்புச் சத்தைக் கூட்டுதல் போன்ற உணவு முறையில் மாற்றங்கள்.

இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்றவை, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுக்குள் உட்படுகின்றன. இறைச்சி சாப்பிடாத பிள்ளைகள் கேல்(gale), ஸ்பினாச்(spinach), கொலாட் க்றீன்ஸ்(coltsfoot greens) போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்ணவேண்டும்.

ஃபோலிக் அசிட் மற்றும் விட்டமின் பி 12 சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளல்.

இரும்புச்சத்து நிறைந்த விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை சேர்த்துக்கொள்ளுதல்.

Latest articles

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

More like this

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...