நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – பம்பரக்கலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.