குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டினை பருந்து தாக்கியதனால் கூட்டிலிருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அம்பியூலன்ஸ் வண்டி உதவியுடன் வைத்தியாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குளவிக் கூட்டை அகற்றும் நடவடிக்கையில் குளியாபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.