கொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வராது என்கிற வதந்தியைத் திரிணாமூல் காங்கிரஸ் பரப்புவதாகத் கூறியுள்ளார்.
வங்கதேசத்தினர் இந்தியாவில் ஊடுருவுவதை மம்தா பானர்ஜி விரும்புவதாகக் குறிப்பட்ட அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.