செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுகுஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது வெற்றி!

குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது வெற்றி!

Published on

spot_img
spot_img

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 51ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 45 ஓட்டங்களையும் டிம் டேவிட் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப், லொக்கி பெர்குசன் மற்றும் சங்வான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விருத்திமான் சஹா 55 ஓட்டங்களையும் சுப்மான் கில் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கிய்ரன் பொலார்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டிம் டேவிட் தெரிவுசெய்யப்பட்டார்.

Latest articles

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

More like this