நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12ஆம் திகதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. படத்தின் பாடல் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டார்.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்து விட்டது. தெரியாமல் மகேஷ் சாரின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். ஆனால், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.